நாம சிக்னல்ல நிக்குறப்ப பத்திரிக்கைல இருந்து பொம்மை வர அனைத்தையும் விற்க முயற்சிக்கிற குழந்தைகள பாத்துருப்போம். அதெல்லாம் ஒன்னும் வேணாம் போன்னு விரட்டிட்டு நாட்டு நிலைமைய பாருன்னு கருத்து சொல்லுவோம். இதே போல தான் Suresh Eriyatக்கு நடந்தது. தன்னோட கார்ல மும்பை வீதில போறப்ப, கூடைகள் விற்குற ஒரு சின்ன பொண்ணு அவர நெருங்குறப்ப வழக்கம் போல அதெல்லாம் ஒன்னும் வேணாம் போன்னு சொல்லிருக்காரு. இருந்தாலும், இந்த நேரத்தில, அவர் அந்த பொண்ண தாண்டி போரப்ப குற்ற உணர்ச்சியால தாக்கப்பட்றாரு. அவ வீட்டுக்கு அமைதிய கொடுப்பதுக்காக கூடைகளை விற்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தா என்ன செய்றது? அவளுக்கு என்கிட்ட இருந்து ஏதாவது உதவி தேவைப்பட்ருந்தா? நாம ஏன் எதயும் யோசிக்காம அந்த பொண்ண விரட்டுனோம்னு நினைத்தான். இந்த குற்ற உணர்வு தான் டோக்ரிக்கு அடிப்படையாக அமைஞ்சுது - 14 நிமிட ஸ்டாப் மோஷன் அனிமேஷன் குறும்படம் இத தயாரிக்க 8 ஆண்டுகள் ஆனது!
No comments:
Post a Comment