Friday, June 3, 2022

Nocturnal Animals

Tamil Review - Nocturnal Animals

 லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஆர்ட் கேலரி வச்சிருக்கிற சூசன் பெருமளவு பணம் உள்ள ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்றாங்க, கணவர் ஹட்டன் ஓட திருமண வாழ்க்கை சந்தோசமா இல்லை. ஒரு parcel வீட்டுக்கு வருது அத திறக்கும் போது கைல வெட்டு பட்டு காயம் ஆகுது. சூசனின் Ex- கணவரான எட்வர்ட் ஷெஃபீல்டின் முதல் நாவலோட (Nocturnal Animals) கையெழுத்துப் பிரதி அது. அந்த நாவல்ல வர குறிப்பு எல்லாம் அவளோட முந்தைய வாழ்க்கை ய ஞாபக படுத்துது. நாவல்ல, டோனி ஹேஸ்டிங்ஸ் மேற்கு டெக்சாஸ் வழியா மனைவி மற்றும் அழகான டீன் Age மகளோட நைட்ல ட்ரிப் போராங்க. அந்த டைம் ல முன்னாடி போன ரெண்டு கார் வழி விடாம போக டோனி வேகமா ஹார்ன் அடிக்க வழி விட்ராங்க. முன்னாடி போனதும் அந்த டீன் ஏஜ் பொண்ணு கண்ணாடி வழியா Middle Finger காட்ட நிலமை மோசமாகுது.. இதுக்கு மேல என்ன நடந்துருக்கும் அந்த நாவல ஏன் சூசனுக்கு அனுப்பிருக்கான் எட்வர்ட்? இது அவங்களோட கடந்த காலத்தில நடந்த சில கொடூரமான நிகழ்வின் கற்பனையான பதிப்பா? அப்படின்னு யோசிக்கிறதுக்குள்ள சூசன் மற்றும் எட்வர்ட் ஓட காதல் கதையும் வருது. எதுக்காக லவ் வந்துச்சு எதுக்காக பிரியுராங்க . இதுக்கும் நாவல்க்கும் என்ன சம்மந்தம் இதான் படத்தோட மீதி கதை.

MovieYearGenreDirectorCastIMDB Rating
Nocturnal Animals2016Thriller/Drama Tom FordAmy Adams, Jake Gyllenhaal, Michael Shannon, Aaron Taylor-Johnson, Isla Fisher, Armie Hammer, Laura Linney, Andrea Riseborough, Michael Sheen7.5

No comments:

Post a Comment

Labels

Tags