சிறைல இருந்து வெளிய வர சாம் சில்டர்ஸ் மறுபடியும் அதே குற்றங்களை செய்றாரு . நல்லா குடிச்சுட்டு ஹெராயின் ஏத்திக்கிட்டு போதைப்பொருள் சப்ளை செய்றவன கொன்னுடுவேன்னு மிரட்டி ஒருத்தன கத்தியால் குத்திக் கொன்ற பிறகு சாம் தனக்கு உதவியும் மன்னிப்பும் தேவைனு உணர்ந்த பிறகு, மனைவி லின் அவரை தேவாலயத்திற்கு அழைச்சுட்டு போறாங்க . தனது வாழ்க்கை முறையை முற்றிலுமா மாற்றியமைச்சு , போதைப்பொருள், வியாபாரம், குடிப்பழக்கம், கொலை எல்லாத்தையும் விட்டுட்டு, சாம் அதே மோசமான கடந்த காலத்தைக் கொண்டவங்களுக்காக ஒரு தேவாலயத்தைத் திறக்க முடிவு செய்றாரு . அதே நேரத்தில, சாம் சூடானுக்கு ஒரு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்றாரு , அங்க போரின் உண்மைகள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்ல பயிற்சி அளிக்கப்படுவதைப் பார்க்கிறாரு. அதனால, போரினால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு அனாதை இல்லத்தைத் திறக்க முடிவு செய்கிறார், ஆனால் இராணுவத்தை உருவாக்க குழந்தைகள கடத்திட்டு போற கிளர்ச்சியாளர்கள் சாமின் அனாதை இல்லத்தை எரிக்க முடிவு செய்றாங்க . சாம் குழந்தைகளுக்காக போராட முடிவு செய்றாரு மற்றும் பல நேரங்கள்ல கெட்டவங்கள கொன்று குழந்தைங்களோட உயிரைக் காப்பாத்துறாரு . உண்மைக் கதையின் அடிப்படையில எடுக்கப்பட்ட மெஷின் கன் பிரீச்சர் ஒரு போதைப்பொருள் எடுத்துக்குற ஒரு உடைந்த மனிதனோட இதயத்தின் மாற்றத்தை சித்தரிக்குது.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
Machine Gun Preacher | 2011 | Action/Crime | Marc Forster | Gerard Butler,Michelle Monaghan, Michael Shannon | 6.7 |
No comments:
Post a Comment