ஒரு சின்ன விசயம் மிகப்பெரிய விளைவ ஏற்படுத்தும் இது தான் படத்தோட கான்செப்ட். தன்னோட அப்பாவுக்கு இருக்குர ப்ளாக் அவுட் தனக்கும் வந்துட்ரத புரிஞ்சுக்கிர ஹீரோ அதனால என்ன விளைவுகள சந்திக்கிராருங்கரது தான் கதை. சின்ன வயசுல இருக்குரப்ப இந்த ப்ளாக் அவுட் வரும்போது மயங்கி விழுந்துட்ரான் என்ன நடக்குதுனு தெரியாம. அத டைரி ல நோட் பன்னிட்டே இருக்க ஹீரோ க்கு பெரியவன் ஆன அப்புரம் அத படிக்கும்போது மயங்கி விழுந்த சமயத்துல என்ன நடந்ததுச்சுன்னு ஞாபகம் வர ஆரம்பிக்குது. கொஞ்ச நேரதுல வேற ஒரு இடத்துல வேற ஒரு வயசுல மயக்கம் தெளியுரான். எது இதுல உண்மைனு கண்டுபுடிக்க மருபடியும் டைரி ய படிக்குரான். மறுபடியும் வேறு இடம் வேறு ஒரு வயதுல மயக்கம் தெளியுரான். இதன் மூலமா தன்னால டைம் ட்ராவல் பன்ன முடியும் நடந்த நிகழ்வ மாத்த முடியும்னு நம்ப ஆரம்பிக்கிரான். அதனால முடிவில அவனோட நிகழ்கால வாழ்க்கை என்ன ஆகுதுங்குரது மீதி கதை. ஹீரோ வுக்கும் படம் பாக்குர நமக்கும் என்ன நடக்குதுனு தெரியாத அளவுக்கு ரொம்ப த்ரில்லிங்கா படத்த எடுத்துருக்காரு டைரக்டர். நிச்சயம் உங்க டைம் கில்லரா இந்த த்ரில்லர் திரைப்படம் இருக்கும்.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
The Butterfly Effect | 2004 | Sci-fi/Thriller | Eric Bress,J. Mackye Gruber | Ashton Kutcher, Amy Smart, Eric Stoltz, William Lee Scott, Elden Henson, Logan Lerman, Ethan Suplee, Melora Walters | 7.6 |
No comments:
Post a Comment