Thursday, June 9, 2022

Black House (Geomeun jip)

Tamil Review - Black House

  ஒரு இன்சூரன்ஸ் Investigator கொடூரமான தொடர் கொலைகளை விசாரிக்கிறது தான் படத்தோட கதை.
காப்பீட்டு நிறுவன ஊழியர் ஜியோன் ஜூன்-ஓ (ஹ்வாங் ஜியோங்-மின்) தனக்கு வர death இன்சூரன்ஸ் கிளைம் காக விசாரிக்க வாடிக்கையாளரோட வீட்டுக்கு போறாரு . வாடிக்கையாளரின் 7 வயது மகன் கூரையில தூக்கில தொங்கியபடி இறந்து கிடப்பதை பாக்குறாரு . பிரேத பரிசோதனை மற்றும் அனைத்து ஆதாரங்களும் தற்கொலைனு சொல்லுது . ஆனால் அந்த சம்பவம் உண்மையில ஒரு கொலைதானு ஜியோன் சந்தேகப்படறாரு . தனது மகன் உண்மையிலேயே தூக்கில தான் தொங்கி இறந்ததா பையனோட அப்பா பார்க் (காங் ஷிங்-இல்) கடுமையா வலியுறுத்தினாலும், சிறுவனோட மரணத்தில சந்தேகம் கொண்ட ஜியோன், சிறுவனின் ஆயுள் காப்பீட்டுத் தொகைய கொடுக்க மறுக்கிறார். பார்க் இன்சூரன்ஸ் கிளைம் கொடுக்கணும்னு , ஜியோனையும் அவரது காப்பீட்டு நிறுவனத்தையும் மிரட்டுறாரு . சிறுவனின் இறுதிச் சடங்கில, இறந்த குழந்தையின் தாயான ஷின் (யூ சன்) தனது மணிக்கட்டில தற்கொலைக்கு முயன்ற காயங்கள் இருப்பத ஜியோன் பாக்குறாரு . பார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜியோனின் சந்தேகம் அதிகரிக்குது . உயிரைக் காக்க வேண்டிய காப்பீடு, கொலையை ஊக்குவிப்பதா நினைக்குற ஜியோன் காப்பீட்டு தொகைய கொடுக்காம நிறுத்தி வைக்குறாரு . இது மாதிரி பல இன்சூரன்ஸ் கிளைம் செட்டிமென்ட் ஆகிறுக்குறதையும் பாக்குற ஜியோன் அத விசாரிக்க ஆரம்பிக்க அதனால அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் வருதுங்கிறத பயங்கர ட்விஸ்ட் & திகிலோட சொல்லிருக்காங்க.

MovieYearGenreDirectorCastIMDB Rating
Black House (Geomeun jip)2007Thriller/HorrorTerra Shin Hwang Jung-min, Yoo Sun, Kang Shin-il6.1

No comments:

Post a Comment

Labels

Tags